கனடாவின் டொரோன்டோ நகரில் நடத்தப்பட்ட கேன்டிடேட் செஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த குகேஷ் முதலிடம் பிடித்துள்ள நிலையில், இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சிப்பதாக இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளர் தேவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “இந்த செஸ் போட்டி இந்தியாவில் நடந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். இந்தியாவில் தெலுங்கானா, குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏதாவதோன்றில் இந்த போட்டி நடைபெறலாம்” என்றார்.
2013ஆம் ஆண்டு, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நோர்வேயின் கார்ல்சென்னுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.