ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த குட்டியாராச்சி
“விஜயதாச ராஜபக்ச ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்று நாடளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
பொதுஜன பெரமுன கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவர் மற்றுமொரு அரசியல் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றால் தற்போதுள்ள கட்சி உறுப்புரிமையை விரைவில் இழக்க நேரிடும். இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும்.
இது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் விரைவில் தீர்மானம் மேற்கொள்வார்” என கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகளும் தீர்மானங்களும் ஏனைய கட்சிகளிலும் தாக்கம் செலுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
விஜயதாச ராஜபக்சவிற்கு புதிய பதவியொன்று கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் மற்றுமொரு பதவியை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு நெருக்கடியை சந்தித்துள்ளார்.