களுத்துறையில் உளுந்து வடை மற்றும் தேநீர் எண்ணூறு ரூபா?: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

களுத்துறையில் உள்ள உணவகம் ஒன்றில் வெளிநாட்டவர் ஒருவருக்கு உளுந்து வடை மற்றும் தேநீர் கோப்பையை அதிக விலைக்கு விற்பனை செய்தக் குற்றச்சாட்டில் முதியவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரகல்ல சுற்றுலா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சந்தேக நபர் நேற்று(18) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உளுந்து வடை மற்றும் தேநீர் கோப்பையொன்றிற்கு வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து எண்ணூறு பணம் பெற்றுள்ளார்.

இவ்வாறு பல நாட்களாக வெளிநாட்டவர்களை ஏமாற்றி வந்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

களுத்துறையை சேர்ந்த 60 வயதுடைய முதியவரான இவர் கடையில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நுகர்வோர் அதிகாரசபை மற்றும் மொரகல்ல சுற்றுலாப் பொலிஸாரின் உத்தியோகத்தர்கள் சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

அதிக விலை கொடுத்து உணவு வாங்கியமையை குறித்த வெளிநாட்டவர் காணொளியாக பதிவு செய்திருந்தார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (19)முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Recommended For You

About the Author: admin