மோடியின் பிரச்சார ஆயுதத்தை கையில் எடுத்த அனுர

ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி என கூறப்படும் தேசிய மக்கள் சக்தியின் மூலம் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக அண்மையில் பல கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தன.

‘Father’ எனப்படும் ஒரு திரைப்படம் குறித்தே இவ்வாறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

1970களில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி குறித்த திரைப்படம் உருவாக்கப்பட உள்ள நிலையில் இத்திரைப்படம் crime மற்றும் thriller திரைப்படமாக அமையும் எனவும் அதன் ஆரம்ப விழாவில் தெரிவிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப விழா கடந்த 6ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

 n,n

Father sinhala movie

இலங்கை கலைஞர்களின் நடிப்பில் இத்திரைப்படம் எடுக்கப்பட உள்ளது.

திரைப்படத்தில் பணி புரியவுள்ள கலைஞர்களில் அநேகமானவர்கள் திசைக்காட்டியுடன் தொடர்புபட்டவர்கள் என்ற காரணத்தினால் தேசிய மக்கள் சக்தி திரைப்படங்களை உருவாக்கி வருகின்றது என்ற கருத்துக்கள் பரவலாக காணப்படுகின்றன.

lkjl

இதேவேளை,எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வெளியாகவுள்ள ‘my red comrade’ திரைப்படமும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான திரைப்படமாக அவதானிக்கப்படுகிறது.

lkgjl

My red comrade

திசைக்காட்டிக்கு நெருக்கமானவர்களே குறித்த திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த திரைப்படத்துக்கு பாரிய அளவில் வரவேற்பு காணப்படுகிறது.

அதன் உண்மைத்தன்மையை திரைப்படங்கள் வெளியான பின்னரே கண்டுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

எவ்வாறாயினும், திசைக்காட்டியைச் சுற்றியிருக்கும் கலைஞர்கள் நாளுக்கு நாள் புதிய புதிய கலையம்சங்களை அரசியலினுள் புகுத்திய வண்ணம் உள்ளனர்.

இதனை உற்று நோக்கும் பலரும் இந்திய விஜயத்தின் பின்னர் அனுர மோடியின் அரசியல் நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ஏனெனில், இந்திய பிரதமரான மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களுக்காக திரைப்படங்களை பயன்படுத்தியமை பிரசித்தமான ஒரு உண்மை.

யார் எவ்விதத்தில் புதிய கதைகளை எழுதினாலும் 2024ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் என்பது இலங்கைத்தீவின் தலையெழுத்தை மாற்றும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin