கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது.
இதன் காரணமாக சுமார் 10 மில்லியன் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதி மக்கள் பொது விநியோக (ரேஷன்) முறையின் கீழ் நீரை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொகோட்டாவை சூழவுள்ள பகுதிகளை ஒன்பது வலயங்களாக பிரித்து, ஒவ்வொரு வலயத்திலும் 24 மணி நேர நீர் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், ஒருதுளி தண்ணீரையும் வீண்விரயமாக்க வேண்டாமெனவும் அவர் பொகோட்டா மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
மழையின்மை மற்றும் அசாதாரண வெப்பம் காரணமாக கொலம்பியாவின் நீர்த்தேக்கங்கள் வறண்டு போயுள்ளன.
இந்த நிலையில், எதிர்வரும் 30 வருடங்களில் நேர் தேக்கங்களை பாதுகாப்பதற்கு கொலம்பிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த பின்னணியில், குடியிருப்பாளர்கள் நீரை பயன்படுத்துவதை குறைத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.