விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியுள்ள பெருமளவான வெளிநாட்டவர்கள்

இலங்கையில் 2,400 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தமது விசா காலம் கடந்தும் நாட்டில் தங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இதனிடையே, வெலிகம பிரதேசத்தில் பல ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரஜைகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் உடனடி தீர்வு காணாத நிலையில், மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்படக்கூடும் என உள்ளூர் வர்த்தகர்கள் எச்சரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தென் மாகாணத்தில் இஸ்ரேலியர்களும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த டயானா கமகே, இந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் உள்ளூர் வாசிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin