புதிதாக பன்னிரண்டு அமைச்சர்களை நியமிக்க தீர்மானித்துள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய அமைச்சர்களில் 10 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்படவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுளளள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மொழிவு

நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, ஜனக பண்டார தென்னக்கோன், எஸ்.பி.திஸாநாயக்க, விமல வீர திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்மொழிந்துள்ளது.

ஏனைய கட்சிகள்

ஏனைய கட்சிகளில் இருந்து ஜீவன் தொண்டமான் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா (தேசிய காங்கிரஸ்) ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம் 37 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recommended For You

About the Author: webeditor