இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசா போரை தவறான முறையில் அணுகுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மோதலை இஸ்ரேல் கையாளும் விதம் குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
“நெதன்யாகு செய்வது தவறு என்று நான் நினைக்கிறேன். அவரது அணுகுமுறையுடன் நான் உடன்படவில்லை.”என்றும் பைடன் ஸ்பானிஷ் மொழி தொலைக்காட்சியொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
காசாவில் போர் ஆரம்பமான போது முழுமையான இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துகளையே பைடன் வெளிப்படுத்தி வந்தார். ஆனால், அண்மைக்காலமாக சில எதிர் கருத்துகளையும் அவர் வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த வாரம் பைடன், நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன், தன்னார்வ தொண்டாளர்கள் உயிரிழப்பது மற்றும் சிவிலியர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனை வெள்ளை மாளிகை இஸ்ரேலை அச்சுறுத்தியதான தொனியில் செய்திகள் வெளியாகியிருந்தன.
“போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு நாட்டிற்குச் செல்லும் அனைத்து உணவு மற்றும் மருந்துகளுக்கான பாதுகப்பை உறுதிப்படுத்த வேண்டும்.” என பைடன் இந்த தொலைபேசி அழைப்பில் நெதன்யாகுவிடம் கோரியுள்ளார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பு கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர் ஏற்பட்ட போரால் ஹமாஸ் ஆளுகைக்கு உட்பட்ட காசா மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் இதுவரை 33,000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்