அதிகாரத்தை கைப்பற்றும் சந்திரிகா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி சுதந்திரக் கட்சியின் அரசியல் சபையைக் கூட்டுமாறு கட்சியின் பதில் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கட்சியின் தலைவராக செயல்பட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவின் பின்னணியில், கட்சியின் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் கலந்துரையாடவே அரசியல் சபைக் கூட்டத்துக்கான அழைப்பை விடுக்குமாறு நிமல் சிறிபாலடி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டையடுத்து, சு.கவின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்பட இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

இந்த உத்தரவு ஏப்ரல் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்க விரும்புவதாக மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இந்த பின்புலத்திலேயே அவரது தலைமை பதவியை பறிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அனைத்து நகர்வுகளையும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே மேற்கொள்வதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

புதிய தலைவராக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதுடன், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரில் ஒருவர் இடைக்காலத் தலைவராக தெரிவுசெய்யவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: admin