ரணில் – பசில் மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இடையில் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் இரண்டுமுறை இருவரும் சந்தித்து பேச்சுகள் நடத்தியிருந்த போதிலும் குறித்த இரண்டு சந்திப்புகளிலும் பசில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டிருக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென பசில் ராஜபக்ச தொடர்சியாக கருத்து வெளியிட்டு வருகிறார்.

இதுதொடர்பில் அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ள போதிலும், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக ரணில் விக்ரமசிங்க பசிலுக்கு பதில் அளித்துள்ளார்.

என்றாலும், பொதுத் தேர்தலை நடத்தும் முயற்சியில் இருந்து பின்வாங்கப் போவதில்லையென பசில் ராஜபக்ச உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

பொதுத் தேர்தலை முதலில் நடத்தினால் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனக் கூறும் பசில் ராஜபக்ச, ஒரு கட்சியாக எமது அரசியல் எதிர்காலம் பற்றியே நாம் சிந்திக்கிறோம். அதனால் பொதுத் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பின்புலத்திலேயே நேற்று மாலை மூன்றாவது தடவையாக ரணில் விக்ரமசிங்கவை பசில் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது பொதுத் தேர்தலை முதலில் நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர் ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளார். என்றாலும், அதற்கு ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிக்ஞை எதுவும் பசிலுக்கு கிடைக்கவில்லை என தெரிய வருகிறது.

இதனால் பொதுத் தேர்தலை நடத்தும் பசிலில் வியூகங்கள் தோல்வியடைந்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது..

Recommended For You

About the Author: admin