தென் மாகாணத்தை ஆக்கிரமிக்கும் ரஷ்ய, உக்ரேனிய பிரஜைகள்

ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரஜைகள் தென் மாகாணத்தில் சுற்றுலா விசாவில் தங்கி பல்வேறு தொழில்களை செய்வதன் மூலம் ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படலாம் என அரச கணக்குகள் குழு (COPA) வெளிப்படுத்தியுள்ளது.

கோபா குழு அதன் தலைவரான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய போது இது தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்த வாரம் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தென் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளும் இந்த சம்பவத்தை தடுக்க இணைந்து கலந்துரையாடவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹரி இலுக்பிட்டிய குழு முன்னிலையில் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இந்த விடயத்தை குழுவில் எழுப்பினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த டயானா கமகே,

‘ரஷ்யர்கள் தென் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளை விநியோகிக்கின்றனர்.

நான் வெலிகமவுக்குச் சென்றபோது, ​​Safin Club, Sarifin School, உணவகங்கள், ஹோட்டல்கள், உணவு விநியோகம் போன்ற தொழில்களில் ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் வந்து வியாபாரம் செய்கின்றனர்.

இதற்கு தீர்வு வழங்கப்படாவிடின் இறுதியில் எந்த சுற்றுலா பயணிகளும் நாட்டுக்கு வரமாட்டார்கள்.

ஏனெனில் இவர்களின் உடல்கள் கடலில் மிதக்கும் அளவுக்கு பயங்கரமான நிலைக்கு இது தள்ளப்படும்.

விசிட் விசாவில் வேறு நாட்டிற்குச் சென்று வியாபாரத்தைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. நாட்டில் கண்காணிப்பு குழுவை அனுப்பியுள்ளோம், விசிட் விசாவில் இந்த நாட்டிற்கு வருபவர்கள் வியாபாரம் செய்ய முடியாது என்பதை உறுதியாக இந்த நாட்டுக்கு தெரிவித்து வருகிறோம். ஆனால் இது பின்பற்றப்படவில்லை. ‘ என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin