இந்தியாவில் தற்போது ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
இந்தப் பருவம் முதல் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீச பந்துவீச்சாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் இளம் பந்துவீச்சாளர்கள் தங்களது வேகத்தால் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்ய வைக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
15.3ஆவது ஓவரில் ராஜஸ்தான் பந்தடிக்கும் போது மும்பையின் ஜெரால்ட் கோட்சியா மணிக்கு 157.4 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசினார்.
அதன்மூலம் 2024 ஐபிஎல் தொடரில் ஆக வேகமாகப் பந்துவீசியவர் என்ற சாதனையை தன்வசப்படுத்திக் கொண்டார் தென்னாப்பிரிக்காவின் ஜெரால்ட்.
இதற்கு முன்னர் அந்த சாதனையை இந்தியாவின் மயான்க் யாதவ் படைத்தார்.
லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணிக்கு விளையாடும் மயான்க் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மணிக்கு 155.8 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசினார்.
ஐபிஎல் வரலாற்றில் ஆக வேகமாகப் பந்து வீசியவர் அவுஸ்திரேலியாவின் ஷான் டையிட். 2011ஆம் ஆண்டு அவர் மணிக்கு 157.71 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசினார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.