நெதர்லாந்தின் ஈத் நகரில் சிறை பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏந்திய அடையாளந்தெரியாத நபர்களால் இவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அந்தப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
சிறைபிடிக்கப்பட்டவர்களில் மூவர் பல மணிநேரங்களுக்குப்பின்னர் விடுவிக்கப்பட்டதைாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனையடுத்து நான்காவது நபரும் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறுதி பணயக் கைதியும் விடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நபர்களால் நால்வர் சிறைப்பிடிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் எவ்வித பயங்கரவாத நோக்கமும் இல்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் முன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனறன.