செனகல் எதிர்க்கட்சிக் கட்சி வேட்பாளர் பஸ்ஸிரோ டியோமயே ஃபயே (Bassirou Diomaye Faye) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக அரசியலமைப்புப் பேரவை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில் இதனை அறிவித்துள்ளது. அந்த வகையில் பஸ்ஸிரோ,நாட்டின் ஐந்தாவது ஜனாதிபதியாக செயற்படவுள்ளார்.
வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளை கடந்த புதன்கிழமை நாட்டின் உயர் நீதிமன்றம் சரிபார்த்திருந்தது.
இந்த நிலையில் 54 வீத வாக்குகளை பஸ்ஸிரோ பெற்றிருந்தார்.அதேவேளையில் ஆளும் தரப்பு வேட்பாளர் அமடோ பா (Amadou Ba) 35 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
ஜனாதிபதி மக்கி சால் (Macky Sall) பதவி விலகும் நிலையில் பஸ்ஸிரோ டியோமயே ஃபயே ஜனாதிபதியாக எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி பதவி ஏற்கவுள்ளார்.