வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழா இன்று (9) இடம்பெற்றுள்ளது.
திருடர்களின் கைவரிசை
பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் பங்கேற்று தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியுள்ளனர். இந்த தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம், திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.
இதற்கமைய தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 70 பவுண் தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் எச்சரிக்கை
இதனிடையே நாளைய தினம் தீர்த்தத் திருவிழா என்பதனால் அதிகளவான அடியவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அடியவர்கள் தமது நகைகள் மற்றும் பணம் குறித்து அவதானம் தேவை என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.