வடக்கு சுகாதார துறையை மேம்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் தனது காத்திரமான பங்கை வழங்க தயாராக இருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் சண்முகரத்தினம் வட மாகாண ஆளுநரிடம் உறுதி அளித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார துறையை மேம்படுத்துவதற்கான சிங்கப்பூர் அரசாங்கத்தின் உதவி தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் சிங்கப்பூர் முன்னாள் துணைப் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு சுகாதார துறையை நவீனப்படுத்தல்
குறித்த சந்திப்பில் வடக்கில் அபிவிருத்தி செய்ய வேண்டிய துறைகள் தொடர்பில் இருவருக்குமிடையில் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
வடக்கு அபிவிருத்திக்கு சிங்கப்பூர் உறுதி
இதேவேளை வடக்கு சுகாதார துறையை மேம்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் தனது காத்திரமான பங்கை வழங்க தயாராக இருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் சண்முகரத்தினம் ஆளுநரிடம் உறுதி அளித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இலங்கை சிங்கப்பூர் உறவுகளுடாக வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இடம்பெற்ற மாநாடு ஒன்றுக்காக சென்றிருந்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கு அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.