இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களை தயாராகுமாறு அறிவிப்பு
இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர மேலும் தெரிவிக்கையில், நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும்.
மின்சார உற்பத்தி குறைப்பு
இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும். 2022 அக்டோபர் மாதத்திற்குள் இலங்கை மின்சார சபைக்கு போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால், மின்சார உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருக்கும்.
தற்போது நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுகின்றது.
மழைக்காலம் முடிவடையும் போது இலங்கையில் நீர் மின் உற்பத்தியில் பாரிய சிக்கல்கள் ஏற்படும். இதற்கிடையில், நுரைச்சோலை மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் பராமரிப்பு காரணமாக இயங்கவில்லை.
நவம்பர் 2022 இற்குள் அதை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்