போலியான பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தி இளம் பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கோரிய 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹிக்கடுவ கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த சந்தேகநபர் போலியான பெயர்களைப் பயன்படுத்தி சுமார் 50 போலியான பேஸ்புக் கணக்குகளை நடத்தி வந்துள்ளதுடன், அவற்றைப் பயன்படுத்தி பல இளம் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கேட்டுள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
முகநூல் சமூக வலைதளத்தில் சுமார் இரண்டு வருடங்களாக தனது நண்பராக இருக்கும் இளைஞன் பல சந்தர்ப்பங்களில் தன்னிடம் தவறான முறையில் பேசுவதாகவும் பாலியல் இலஞ்சம் கேட்டதாகவும் பாதிக்கப்பட்ட யுவதி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸில் முறைப்பாடு செய்த குறித்த பெண் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இளம் பெண்ணாக போலி பேஸ்புக் கணக்கு
இதற்கிடையில், இளம் பெண்ணாக போலி பேஸ்புக் கணக்கிற்கு வந்த நபர் ஒருவர், அந்த யுவதிக்கு முகநூல் கணக்கிலிருந்து வேறொரு இணையத்தளத்தின் லிங்கை அனுப்பி, அங்கு அவரது நிர்வாண புகைப்படங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால், அந்தப் பெண் இணைப்பைத்(லிங்கை) திறக்காததால், அதைச் சரிபார்க்குமாறு காதலனிடம் கூறியுள்ளார்.
அதன்படி அந்த லிங்கை அனுப்பிய நபர் அந்த லிங்கை பார்வையிட்ட இளைஞரின் முகநூல் கணக்கில் உள்நுழைய (ஹெக் செய்ய) முடிந்துள்ளது.
பின்னர், அந்த இளைஞனுக்கும் யுவதிக்கும் இடையில் பரிமாறப்பட்ட கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களைப் பெற்று, யுவதியின் புகைப்படங்களை நிர்வாண புகைப்படங்களாக அனுப்பி, நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை கேட்டு யுவதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இணையத்தில் நிர்வாண வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டல்
அப்படி நிர்வாணக் காட்சிகளைக் கொடுக்காவிட்டால் எடிட் செய்யப்பட்ட நிர்வாணக் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதன்படி, குறித்த யுவதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதன் பின்னர் பொலிஸாரின் அறிவுறுத்தலின் பிரகாரம் சந்தேகநபரை பிடிக்க பிலியந்தலைக்கு வருமாறு குறித்த பெண்ணின் ஊடாக சந்தேக நபருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால்,பெண்ணை சந்திப்பதற்காக பிலியந்தலை பேருந்து நிலையத்திற்கு வந்த இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.
பொதுத்தேர்வில் மட்டும் சித்தியடைந்துள்ள இளைஞருக்கு கணினி அறிவு இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் மற்றவர்களின் பேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்யும் அறிவை ஆன்லைனில் பெற்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட போது, தன்னிடம் சில சாக்லேட் பொக்கெட்டுகள் இருந்ததாகவும், அவற்றை குறித்த பெண்ணுக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.