பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள குடியேற்றவாசிகளை இராணுவ தளங்களைப் போன்ற அமைப்புக்களில் தங்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் செலவைக் கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாராளுமன்ற செலவுகளை கண்காணிக்கும் அமைப்பு இதனைக் குறிப்பிட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள், பிரித்தானியாவின் தெற்கு கடற்பகுதியூடாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை விடுதிகளில் தங்கவைப்பதினால் பாரியளவு நிதி வீணடிக்கப்படுவதாக அமைச்சர்கள் வாதிட்டுவருகின்றனர்.
இவ்வாறு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு செலவு செய்யும் பணம் வருடத்திற்கு 03 பில்லியன் பவுண்சுகளாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.