பிரதமர் தினேஷ் குணவர்த்தன வௌ்ளிக்கிழமை (01) மாலை மாத்தறைக்கு பயணத்த விமானப்படை ஹெலிகொப்டரை தரையிறக்குவதில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல்லின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பிரதமர் தினேஷ் கொழும்பில் இருந்து பயணித்த ஹெலிகொப்டர், மாத்தறை கோட்டை மைதானத்தில் தரையிறங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் இதன்போது கடற்புறமாக பலத்த காற்று வீசியதன் காரணமாக ஹெலிகொப்டரைத் தரையிறக்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக நிலமட்டத்தில் இருந்து சிறிது உயரத்தில் வானில் தரித்து நிறுத்தப்பட்ட ஹெலிகொப்டரில் இருந்து வீசிய பலத்த காற்றின் காரணமாக அருகே அருந்த மாத்தறை உணவக விடுதியொன்றின் கூரை கடுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் அங்கு உணவுட்கொண்டிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உணவுகளிலும் மணல் வாரி இறைக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அவர்களுக்கு வேறு உணவு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உணவக விடுதியின் அருகில் நின்றிருந்த மரமொன்றின் கிளையும் ஒடிந்து வீழ்ந்துள்ளது.அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
சிறிது நேரம் குலுங்கிய ஹெலிகொப்டரின் விமானி சற்று நேரத்தில் நிலைமையை சமாளித்து ஹெலிகொப்டரை சாமர்த்தியமாக தரையிறக்கியுள்ளார்.
அங்கிருந்து பிரதமர் தினேஷ் குணவர்தன இறுதி சடங்கு நடைபெற்ற இடத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடா்பில் பொலிசார் விசாரணையொன்றையும் மேற்கொண்டுள்ளனர்.