இந்தோனேசியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரோங் கொங் ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகள் மற்றும் பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தால் சுமார் 1,500 வீடுகள் சேதமடைந்துள்ளதால், அதிகாரிகள் அங்குள்ள மக்களை வெளியேற்ற வேண்டியுள்ளது.
இதுவரை அரசாங்கத்திடம் இருந்து தமக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என இடம்பெயர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதன்போது மழைக்காலத்தில் இந்தோனேசியர்கள் அடிக்கடி வெள்ளம் மற்றும் நிலச்சரிவை எதிர்கொள்கின்றனர்.
ஆனால், காடுகளை அழித்ததால் நிலைமை மோசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.