கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக புதைக்கப்படாமல் இருக்கும் சடலம்!

கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக றொரன்டோவைச் சேர்ந்த பிரஜை ஒருவரின் சடலம் நல்லடக்கம் செய்யப்படாது எட்டு மாதங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

றொரன்டோவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்து எட்டு மாதங்கள் கடந்த நிலையில் அவருக்கு இறுதி கிரியைகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையிலான சட்ட முரண்பாடு காரணமாக இவ்வாறு சடலத்தை நல்லடக்கம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

லுயிஸ் டொட்டோஸ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் கோவிட்19 பெருந்தொற்று தாக்கம் காரணமாக உயிரிழந்தார்.

லுயிஸ், உயிரிழப்புதற்கு முன்னதாக தான் இறந்த பின்னர் ரிச்மன்ட் ஹில் ஹெட்போர்ட்டில் அமைந்துள்ள குடும்ப மயானத்தில் தமது உடலை நல்லடக்கம் செய்யுமாறு மகள் லிசாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சட்டப் பிரச்சினைன காரணமாக தனது தந்தையின் உடல் கடந்த எட்டு மாதங்களாக பிரேதவறையொன்றின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதாக அவரது மகள் தெரிவிக்கின்றார்.

பல நாட்கள் கண்ணீரில் மறைவதாகவும், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வரையில் ஓயப் போவதில்லை எனவும் லிசா கூறுகின்றார்.

இந்த குடும்ப மயானம் அமைந்துள்ள காணியை கொள்வனவு செய்த புதிய உரிமையாளர்கள், தந்தையை மயானத்தில் நல்லடக்கம் செய்ய விரும்பவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

முன்னதாக செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் புதிய காணி உரிமையாளர்கள் செயற்படவில்லை என குற்றம் சுமத்துகின்றார்.

கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவாலயம் விற்பனை செய்யப்பட்ட போது அதனுடான மயானப் பகுதியும் விற்பனை செய்பய்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் குறித்த மயானத்தில் ஓர் பகுதி தமக்கு உரிமையானது எனவும் இதற்கான ஆதாரங்கள் தம்மிடம் காணப்படுவதாகவும் என லிசா தெரிவிக்கின்றார்.

உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால் சடலத்தை அடக்கம் செய்ய முடியாது என காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த முரண்பாடு தொடர்பில் ஒன்றாரியோ உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுளு;ளது. தனது தந்தை மத வழிபாடுகளில் ஆழமான நம்பிக் கொண்டவர் எனவும் அவரது உடலை தமது மத நம்பிக்கைபடி தகனம் செய்ய முடியாது என லிசா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor