இலங்கைக்கு தொடர்ச்சியாக வருகைதரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 310 ஆக காணப்படும் நிலையில், அந்நிய செலவாணியை அதிகரிப்பதன் மூலம் இலங்கையின் ரூபாவை வலுப்படுத்த முடியும்.
நாட்டில் உற்பத்தியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்நிலைமை காரணமாக இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவடையும் நிலையும் காணப்படுகின்றது.
ஆகவே நாட்டின் உற்பத்தியினை அதிகரிப்பதுடன், இறக்குமதியினை கட்டுப்படுத்தி, வெளிநாட்டு நாணயத்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.