முல்லைத்தீவு – அலம்பில் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கைது நடவடிக்கை நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.
கிழக்கு கடற்படை கட்டளையின் படி, இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய இழுவை படகுகளை விரட்டுவதற்கான சிறப்பு நடவடிக்கையொன்று இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை
இந்நிலையில், அலம்பில் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இந்திய இழுவை படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களும் திருகோணமலை கடற்படை கப்பல்துறைக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் பயன்படுத்திய இழுவை படகும் கடற்படையினரால் திருகோணமலை கடற்தொழில் பரிசோதகரிடம் பாரப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.