டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மிகப் பெரிய வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இது 577 டெஸ்ட் வரலாற்றில் ஓட்டங்களின் அடிப்படையில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதம், ரோஹித் ஷர்மாவின் 11வது சதம், ரவீந்திர ஜடேஜாவின் 4வது சதம், முதல் இன்னிங்ஸில் முகமது சிராஜின் 4 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜாவின் ஐந்து விக்கெட்டுகள் ஆகியவற்றால் இந்தியா 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் 556 ஓட்டங்களை துரத்திய இங்கிலாந்து அணி 39.4 ஓவர்களின் 122 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு முறை இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

தனது இரட்டை சதத்துடன், வினோத் காம்ப்ளி மற்றும் விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு அடுத்தடுத்த டெஸ்ட்களில் 200 ஓட்டங்களை அடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை யஷஸ்வி பெற்றுள்ளார்.

இது தவிர, இந்தியாவுக்காக இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த இந்திய ஜாம்பவான்கள் பட்டியலிலும் அவர் தனது பெயரை பதிவு செய்தார்.

உலக அளவில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (12) அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி 2-0 என்ற ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது.

அத்துடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்தைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Recommended For You

About the Author: admin