புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அவர் இந்த விடயத்தை இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னதாக புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆளும் கட்சியின் சிலர் தமது குழுவிடம் உதவி கோரி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சொத்துக்கள் குறைந்த விலையில் விற்பனை
இந்த குறுகிய காலத்தில் மூன்று பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒர் பிரதமர் நியமிக்கப்படுவதனை விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் அரச சொத்துக்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் அதனை தாம் எதிர்ப்பதாகவும்,நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படுவதனை தாம் எதிர்க்கவில்லை எனவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.