அரசாங்கம் இலத்திரனியல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட ஹர்ச டி சில்வா எம்.பி., நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கம் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை ஒடுக்கி வைத்துள்ளது.
இப்போது ஔிபரப்பு ஆணைக்குழு சட்டமூலத்தின் மூலம் எதிர்காலத்தில் இலத்திரனியல் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது.
இந்த அரசாங்கத்தில் கருத்துச் சுதந்திரம் , அடிப்படை உரிமைகளை ஒருபோதும் மதிக்காமல் நடந்து கொள்ளத் தலைப்படுகின்றது என்றும் ஹர்ச டி சில்வா எம்.பி. தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.