ரணிலின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அநாவசிய செலவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வௌிநாட்டுப் பயணங்களின் போது அநாவசிய செலவுகள் அதிகரித்துள்ளதாக டளஸ் அலஹப்பெரும எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்

சுதந்திர மக்கள் காங்கிரஸ் (நிதஹஸ ஜனதா சபாவ) கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், கடந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என்று தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு மொத்தம் ஐந்து பில்லியன் மட்டுமே தேவையாக இருந்த நிலையில் அரசாங்கம் அதற்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கவில்லை.

அதன காரணமாக தேர்தலுக்கான பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு, வாக்களிப்பு நாள் நெருங்கியிருந்த நிலையில் வேறு வழியின்றி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

தேர்தல்களுக்கு செலவழிக்க நிதி பற்றாக்குறை என்று அரசாங்கம் ஒரு புறத்தில் கூறிக் கொண்டே ஜனாதிபதியின் வௌிநாட்டுப் பயணங்களுக்கு மில்லியன் கணக்கில் செலவழிக்கின்றது.

இங்கிலாந்து ராணியின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள மட்டுமே ஆறுமில்லியன் வரையிலான அரச நிதியை ஜனாதிபதி செலவிட்டுள்ளார்.

இவர்களைப் பொறுத்தவரை தேர்தல்கள் நடத்துமாறு கோரினால் நிதி இல்லை என்பார்கள்.

ஆனால் அநாவசிய செலவுகளுக்கு அள்ளி இறைத்து செலவழிப்பார்கள் என்றும் டளஸ் அலஹப்பெரும எம்.பி. தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin