சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட 37 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் பிக்கு ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சோதனையின் போது மிகவும் அரிதான 02 நீல மாணிக்க கற்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரான 72 வயதான நபர், அரசியல்வாதி ஒருவரின் தந்தை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாணிக்கக் கற்கள் சைத்திய வடிவில் காணப்படுவதுடன், அவை பொக்கிஷங்களை அழித்து பெறப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.