ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி பல்லேகலவில் நாளை (09) ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டிக்கான பெயரிடப்பட்ட அணிக்கு வழமை போன்று குசல் மெண்டிஸ் தலைமை தாங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்ற முன்னாள் கேப்டன் தசுன் ஷனக, இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மற்றொரு சகலதுறை ஆட்டக்காரரான சாமிக்க கருணாரத்ன அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிம்பாப்வேயுடனான போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கையின் லெக் ஸ்பின்னராக களமிறங்கிய ஜெஃப்ரி வான்டேஸ் இந்த அணியில் இடம்பிடித்துள்ளமையும் விசேட அம்சமாகும்.
இதேவேளை, சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரை தவறவிட்ட சிரேஷ்ட வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில்,
குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசங்க (துணைத்தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, பதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்கே, ஷெவோன் டேனியல், ஜனித் லியனகே, சாமிக்க கருணாரத்ன, வனிந்து ஹசரங்க, மஹிஷ் தீக்ஷன, துனித் டி, திக்ஷன, துனித் டீக்ஷன, துனித் திக்ஷன, வெல்லாலகே தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.