பொது போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை செய்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்தில் பெண்களை துன்புறுத்தும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் துன்புறுத்தல்கள் தொடர்பில் எந்தவொரு பெண்ணும் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும்.
இந்த விசேட நடவடிக்கையுடன் இணைந்து இரகசிய கமராக்களுடன் கூடிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய 234 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.