ஸ்ரீலங்கா கிரிக்கெட் – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இடையில் மேதல்

இந்தோனேசியாவின் பாலியில் அண்மையில் நடந்த ஆசிய கிரிக்கெட் (ACC) பேரவையின் கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் (PCB) ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது.

2023 ஆசியக் கிண்ண போட்டிகளானது இலங்கைக்கு இடமாற்றப்பட்டதால் ஏற்பட்ட மேலதிக செலவுகள் தொடர்பிலேயே இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

மோதலின் ஆரம்பமும் – உச்சமும்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப விரும்பாத காரணத்தினால் புவி – அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் ஏசிசி மற்றும் பிசிபி ஒரு கலப்பு முறையின் கீழ் 2023 ஆசிய கிரிக்கெட் போட்டிகளை இலங்கையிலும் பாகிஸ்தானிலும் நடத்த தீர்மானித்தது.

இலங்கையிலேயே பெரும்பலான போட்டிகள் நடைபெற்றிருந்தன.

இதனால், ஹோட்டல்கள், விமானங்கள், தங்குமிடம் மற்றும் இடக் கட்டணங்கள் தொடர்பான பல ஒப்பந்தங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் கையெழுத்திட்டது.

பின்னர் 4 பட்டய விமானங்களுக்காக இலங்கைக்கு $281,700 செலுத்த வேண்டும், அதற்கு முன் இலங்கையில் இடம் கட்டணமாக $2,069,885 செலவழிக்க ஒப்புக்கொண்டது.

போட்டிகளை நிகழ்வை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட பிசிபி தலைவர் நஜாம் சேத்தி, 75% தொகையை செலுத்தி, மீதமுள்ள தொகையை போட்டிக்குப் பிறகு செலுத்த ஒப்புக்கொண்டார்.

எவ்வாறாயினும், அவர்கள் இன்னும் ஹோட்டல் கட்டணங்கள‍ை செலுத்தவில்லை. இந் நிலையில் எஸ்எல்சி தலைவர் ஷமி சில்வா, சமீபத்திய ஏசிசி கூட்டத்தின் போது இந்த பிரச்சினையை விவாத மேசைக்கு கொண்டு வந்தார்.

கூட்டத்தில் ஏசிசி தலைவர் ஜெய் ஷாவும் இருந்தார், அவர் சில்வாவை பிசிபியுடன் கூட்டங்களை திட்டமிடுமாறும் அவர்களுடன் நேரடியாக விவாதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த பிசிபி, 2023 ஆசியக் கிண்ணத்தை ஒரு கலப்பின மாதிரியில் ஏற்பாடு செய்யுமாறு கட்டாயப்படுத்தியதால், ஏசிசியும் உரிய கட்டணங்களுக்கு பொறுப்பாகும் என்று கூறியுள்ளது.

ஏசிசி ஹோஸ்டிங் கட்டணமாக $2.5 மில்லியனை மட்டுமே ஒதுக்கியதாகவும், அதேசமயம் போட்டியை ஏற்பாடு செய்வதற்கான அசல் செலவு 4 மில்லியனைத் தொட்டதாகவும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

பிசிபி யின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்

ஜகா அஷ்ரஃப் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய பிசிபி தலைவர் நியமனத்திற்காக பாகிஸ்தானில் கிரிக்கெட் உண்மையில் கடினமான காலங்களை கடந்து செல்கிறது.

நவம்பர் மாதம் முதல் முறையான சம்பளம் இல்லாமல் மொஹமட் ஹபீஸ் கவனித்து வரும் அணியின் பணிப்பாளர் பதவியில் மாற்றம் செய்வது குறித்தும் பேச்சு அடிபடுகிறது.

மேலும் விடயங்களை மோசமாக்கும் வகையில், பிசிபியே தங்கள் அலுவலகத்திற்குள் கொந்தளிப்பான காலகட்டத்தை கடந்து கொண்டிருந்த போது, ​​எஸ்எல்சி இந்த விடயத்தை எழுப்பி, பாகிஸ்தான் போர்டில் உள்ள உள் பூசல்கள் அணியின் செயல்திறனிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2023 உலகக் கிண்ணத்தின் பின் தலைவர் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகியதும், பிசிபி டெஸ்ட் தலைவராக ஷான் மசூத் மற்றும் டி20 தலைவராக ஷாஹீன் அப்ரிடியை நியமித்தது.

ஒரு புதிய ஆட்சியின் கீழ் அவர்களின் பயணம் பெனாட்-காதிர் டெஸ்ட் தொடரில் உலக சாம்பியனான அவுஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் தொடங்கியது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடங்கவுள்ள நிலையில், தற்போது அனைவரது கவனமும் 9 ஆவது சீசனை நோக்கி திரும்பக்கூடும்.

எனினும் பிசிபி மற்றும் எஸ்எல்சி இடையே நீடித்து வரும் நிதிக் கட்டுப்பாடுகள் வரும் நாட்களில் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin