திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்தாவிட்டால், கொழும்பை சுற்றி வளைத்து அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக ஜே.வி.பி. எச்சரித்துள்ளது.
ஜே.வி.பி. கட்சியின் தொழிற்சங்கத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலை முதலில் நடத்த முயற்சிப்பதாகவும் அதன் பின்னர் 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் தொடர்ந்தும் ஆட்சியைக் கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இம்முறை தற்போது பதவியில் இருக்கும் அரசாங்கத்துக்கு நூற்று பதின்மூன்று எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் காணப்பட மாட்டார்கள் எனவும் மக்கள் ஏற்கனவே அந்த முடிவை எடுத்துள்ளதாகவும் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டுகின்றார்.