மேற்குகரை வைத்தியசாலைக்குள் ஊடுருவிய இஸ்ரேலிய படை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலைக்குள் இருந்த மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை இஸ்ரேலிய படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம், இப்னு சினா வைத்தியசாலையில் நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று (30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேநேரம், வைத்தியசாலையில் பதுங்கியிருந்த ஹமாஸ் பயங்கரவாத பிரிவைச் சேர்ந்த நபர்களை தமது படைகள் நடுநிலைப்படுத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் நஜி நஸ்சல் ஏ.எம்.பி. செய்திச் சேவையிடம், இஸ்ரேலியப் படைகளின் ஒரு குழு, வைத்தியசாலைக்குள் இரகசியமாக நுழைந்து இஞைர்களை படுகொலை செய்ததாக கூறினார்.

சைலன்சர்கள் பொருத்தப்பட்ட ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இணையத்தில் இது தொடர்பிலான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin