பிரான்ஸ் மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

பிரான்ஸில் தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் துறை ஊழியர்களும் இந்த ஆண்டு ஊதிய உயர்வைக் கண்டுள்ளனர்.

அடிப்படை சம்பளத்தில் சராசரி 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் மற்றும் பணியாளர்களை பணிக்கு அழைப்பதில் உள்ள சிக்கல் நிலைமை காரணமாக ஊழியர்களின் ஊதியத்தை அதிகரித்து பணியில் ஈடுபடுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் இந்த வருடம் 2.5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் 2022 ஆம் ஆண்டு 7 சதவீதம் பேருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரான்ஸில் புதிய சட்ட நடவடிக்கைகள் உள்ள போதிலும், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சம ஊதிய உயர்வில் முன்னேறமில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில் ஊதிய உயர்வில் 3.7 சதவீத வித்தியாசம் உள்ளதென பெண்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான ஊதிய உயர்வை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு வருகின்றது. இதேவேளை, பிரான்ஸில் ஊழியர்கள் தொழில்களை விட்டு வெளியேறும் நடவடிக்கை தீவிரமடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஊழியர்கள் பணியில் இருந்து விலகும் நடவடிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளது.

இதனால் ஏனைய ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரித்து பணியில் ஈடுபடுத்த பிரான்ஸில் உள்ள தனியார் நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, பணவீக்கம் மற்றும் ஊழியர் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Recommended For You

About the Author: webeditor