பரந்துபட்ட அரசியல் கூட்டணி: சம்பிக்க தெரிவிப்பு

எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்கி தனது வேலைத்திட்டத்துடன் பொதுமக்களிடம் செல்லவுள்ளதாக சம்பிக்க ரணவக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

பெந்தர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,

“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று அவசியம் எனவும், அதற்காக எதிர்காலத்தில் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளேன்.

ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு நபர்கள் வேட்பாளர்களாக களமிறங்குவதாக கூறப்பட்டாலும் தரமான அரசியல் குழுவை அமைத்து எதிர்கால மாற்றங்களுக்கு உட்பட்ட வேலைத்திட்டத்தை மக்களிடம் முன்வைத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளரை முன்வைப்போம்.

பொதுத்தேர்தல் என்றால் அதற்கு ஏற்ற அணி தேர்வு செய்யப்பட்டு முன்னிறுத்தப்படும்அதற்குப் பதிலாக “நான்தான் ஜனாதிபதி வேட்பாளர், இதுவே எனது கொள்கை, எங்களுடன் சேருங்கள்” என்று நாம் யாருக்கும் அழைப்பு விடுக்க மாட்டோம்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டு, தகுதியான வேட்பாளர் ஒருவரையே நாங்கள் முன்னிறுத்துவோம்” என்றும் சம்பிக ரணவக மேலும் குறிப்பிட்டுள்ளார்

Recommended For You

About the Author: admin