மேட்ச் பிக்சிங் சந்தேகம்: சோயிப் மாலிக்கின் ஒப்பந்தம் திடீரென ரத்து

மேட்ச் பிக்சிங் சந்தேகம் காரணமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சோயிப் மாலிக்கின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் ஃபார்ச்சூன் பாரிஷலின் அணிக்காக விளையாடி வரும் நிலையில், அந்த அணியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குல்னா டைகர்ஸுக்கு எதிரான போட்டியின் சோயிப் மாலிக், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. இந்தப் போட்டியின் போது மாலிக் ஒரே ஓவரில் மூன்று நோ-பால்களை வீசியுள்ளார்.

இதனால் மேட்ச் பிக்சிங் குறித்த சந்தேகம் எழுந்ததாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த போட்டியில் மாலிக் ஒரு ஓவரை வீசினார். அதில், இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

இந்த சந்தேகங்கள் வெளிவருவதற்கு முன்னதாகவே, தனிப்பட்ட காரணங்களுக்காக துபாய் செல்ல திட்டமிட்டிருந்த மாலிக், எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், பாரிஷலின் உரிமையாளர் திடீரென தனது ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin