கோட்டாவிற்காக பதவி விலக தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்தால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக சீதா அரம்பேபொல முன்வந்துள்ளார்.

விசேட வைத்தியராக இருந்த சீதா அரம்பேபொல, கோட்டாபயவின் வியட்மகவின் உறுப்பினராக செயற்பட்டார்.

பதவியை இழக்க தயார்

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான அவர் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கிய கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமராகும் கோட்டாபய

கோட்டாபய இணக்கம் வெளியிட்டால் அதற்கு வாய்ப்பு அளித்து சீதா அறம்பேபொலவின் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மையினரும், ராஜபக்சர்களும் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor