மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை (CEB) நிர்வாகத்திற்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
- எந்த ஒரு ஊழியரினதும் இராஜினாமாவை தயக்கமின்றி ஏற்குமாறு CEB க்கு அறிவுறுத்தினேன்.
- நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைத் தொகையினையும் வசூலிக்குமாறு அறுவுறுத்தினேன்.
- நிறுவனத்தின் சீர்திருத்தங்கள் தொடர்பான பணிகளை துரிதப்படுத்துமாறு CEB நிர்வாகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினேன்.
- இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அடையாள வேலைநிறுத்தத்தின் போது CEB இன் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது – என்றார்.
ஏறக்குறைய 5000 CEB ஊழியர்கள் ஒரே நேரத்தில் இராஜினாமா செய்யத் தயாராகி வருகின்றனர் என்று வெளியான செய்தியின் அடிப்படையில் அமைச்சரின் இந்த புதிய உத்தரவுகள் வந்துள்ளன.