நாணய மாற்று விபரம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் (19) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 315.92 ரூபாவிலிருந்து 315.50 ரூபவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326.06 ரூபாவிலிருந்து 325.37 ரூபாவாக குறைந்துள்ளது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கி: கடந்த வெள்ளிக்கிழமை 315.30 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்று 314.80 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது. 326.28 ரூபாவாக காணப்பட்ட விற்பனை பெறுமதியும் 325.78 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி: கடந்த வெள்ளிக்கிழமை 314.92 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்று 313.93 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது. 325 ரூபாவாக காணப்பட்ட விற்பனை பெறுமதியும் 324 ரூபாவாக குறைந்துள்ளது.

சம்பத் வங்கி: கடந்த வெள்ளிக்கிழமை 316 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்று 315 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது. 325 ரூபாவாக காணப்பட்ட விற்பனை பெறுமதியும் 324 ரூபாவாக குறைந்துள்ளது.

hg

Recommended For You

About the Author: admin