இஸ்ரேலுக்கு எதிராக இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச நகை கண்காட்சியில் பங்கேற்ற இஸ்ரேலிய கண்காட்சியாளர்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது

இத்தாலியின் வைசென்சாவில் இஸ்ரேலுக்கு எதிரான ஆதரவாளர்கள் பெரிய அளவில் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு,காஸா மீது குண்டு வீசுவதை நிறுத்து என போராட்டக்காரர்கள் இஸ்ரேலுக்கு எதிராக கோஷமிட்டனர்.

வைசென்சாவில் நடைபெறும் நகைக் கண்காட்சிக்கு 40 நாடுகளில் இருந்து சுமார் ஆயிரத்து 300 கண்காட்சியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்காட்சியை விட்டு வெகு தொலைவில் போராட்டமும் நடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். போராட்டத்தின் தாக்கம் கண்காட்சியை பாதிக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

🚨 ITALY TODAY: Pro-Hamas Protestors & Police Clash🚨

⚠️ WATCH: Don’t miss the ending!

Violence erupts at an anti-Israel protest during Italy’s jewelry fair. Pro-Hamas demonstrators face a harsh reality check in the streets.

👍 Like and share if Italy’s approach inspires you… pic.twitter.com/jdxP4iS2HB

— Shirion Collective (@ShirionOrg) January 20, 2024
வைசென்சா மேயர் கியாகோமோ போசமாய், இந்த போராட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வன்முறைக்கு வழிவகுக்கும் வகையில் போராட்டம் நடத்துவதை பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதாக நியாயப்படுத்த முடியாது எனவும் அமைதி மற்றும் போரை நிறுத்துவதற்காக போராட்டங்கள் மூலம் வன்முறையை தூண்டுவது சரியல்ல எனவும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ஆயிரத்து 140 இஸ்ரேலிய குடிமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 132 இஸ்ரேலிய குடிமக்கள் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் காஸா மீது இஸ்ரேலிய இராணுவம் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது.இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 ஆயிரத்து 973 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin