ஹொலிவூட்டின் பிரபல நடிகரும் அமெரிக்கா கலிப்போர்னியா மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான Arnold Schwarzeneggerரின் கைக்கடிகாரம் ஏலத்தில் சுமார் 2 லட்சத்து 93 ஆயிரம் யூரோவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அவர் கடந்த புதன்கிழமை ஜேர்மனி சென்றபோது, அந்த விலைமதிப்புமிக்க ‘Audemars Piquet’ கைக்கடிகாரம் குறித்து சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து அவர் மியூனிக் விமான நிலையத்தில் மூன்று மணி நேரம் அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான தனது அறக்கட்டளைக்காக இந்த கைக்கடிகாரத்தை அவர் நேற்று முன்தினம் கைக்கடிகாரத்தை ஏலத்தில் விற்பனை செய்யவிருந்தார்.
ஏலத்தின் ஆரம்ப தொகை 50 ஆயிரம் யூரோ என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஒஸ்திரியாவில் நடந்த ஏல விற்பனையில் அந்தக் கைக்கடிகாரம் 2 லட்சத்து 93 ஆயிரம் யூரோவிற்கு ஏலம் போனது.
தனது கடிகாரம் இந்த விலைக்கு ஏலத்தில் விற்பனையானது குறித்து Arnold Schwarzenegger மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
விமானத்தில் சுங்க அதிகாரிகள் தன்னிடம் இரண்டாவது கைக்கடிகாரம் இருக்கின்றதா என தேடியதாகவும் அது நடக்கவில்லை எனவும் ஒளிகூட புக முடியாத இடத்தில் அதனை தான் மறைத்து வைத்திருந்தாகவும் நகைச்சுவையாக கூறியுள்ளார்
எவ்வாறாயினும் கைக்கடிகாரம் குறித்து தெரிவிக்காத காரணத்திற்காக 4 ஆயிரம் யூரோ வரி,5 ஆயிரம் யூரோ அபராதம் உட்பட 35 ஆயிரம் யூரோ Arnold Schwarzenegger அறவிடப்பட்டதாக ஜேர்மானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Audemars Piquet ரக இந்த கைக்கடிகாரம் Arnold Schwarzeneggerருக்காக வடிவமைத்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.