சிவனொளிபாத மலைக்கு செல்லத் தயாரா

இந்த நாட்களில் இரவு மற்றும் காலை வேளைகளில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகளன் அனைவரும் குளிரை தாங்கும் வகையில் ஆடைகள் மற்றும் கையுறைகளுடன் வருகை தருமாறு இலங்கை சுகாதார இயக்கத்தின் மருத்துவ முகாமின் தலைவர் வைத்தியர் சஜித் மஞ்சுள கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர்,

குளிர்ந்த ஆற்றில் குளிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் சிகிச்சைக்காக எங்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வலிப்பு, இதயக் கோளாறு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் சாப்பிடும் மருந்துகளை எப்பொழுதும் கையோடு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

ஹட்டன் ஊடாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு வைத்திய உதவி அல்லது முதலுதவி உதவி தேவைப்படின் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சிகிச்சை நிலையத்திற்கு வந்து தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.

ஒவ்வொரு சிவனொளிபாத மலை யாத்திரைக் காலத்திலும் விபத்துக்கள் அல்லது நோய்த் தாக்குதல்கள் காரணமாக உயிர்கள் பலியாகி வருகின்றன.

சுகாதார அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றினால் மாத்திரமே இவ்வாறான சம்பவங்களைக் குறைக்க முடியும் எனவும் இலங்கை சுகாதார இயக்கத்தின் மருத்துவ முகாமின் தலைவர் மற்றும் வைத்தியர் சஜித் மஞ்சுள மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin