கடன் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடல் முடிவடைந்ததன் பின்னர் 600 வீதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூலம், 600 வீதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன்களை மீள செலுத்த முடியாததால் காரணமாக வீதிகள் மற்றும் புகையிரத பாதைகள் நிர்மாணித்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கமைய, கொஹுவலையில் ஹங்கேரியின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் இதுவரை முழுமையடைவில்லை எனவும், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை நிறைவடையும் வரை நிதியுதவி கிடைக்கப்போவதில்லை எனவும் போக்குவரத்து அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.