ஆய்வக இறைச்சி உற்பத்தி முறைமைக்கு பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன.
இதன்படி, ஆய்வக இறைச்சி உற்பத்தி முறையானது, இயற்கை உணவு உற்பத்தி முறைமைக்கு அச்சுறுத்தல் என குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்த நடைமுறைகள் முதன்மை பண்ணை அடிப்படையிலான அணுகுமுறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய விவசாய அமைச்சர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 12 ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு பேரவையில் பிளவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவில் செல் அடிப்படையில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதில்லை எனவும் உணவு ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரசபையின் (EFSA) மதிப்பீட்டிற்குப் பின்னரே அனுமதி பெறமுடியும் குறிப்பிடப்படுகிறது.