ஆணைக்குழுக்களின் அதிகாரிகள் அக்கறையற்றவர்கள்

கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் காட்டும் அக்கறையின்மை குறித்து தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் அதிருப்தியை வெளியிட்டது.

2020 இல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை குழுவில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் புலப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்றத்தினால் கணக்காய்வு அறிக்கை மற்றும் சரியான தரவுகளைக் தருமாறு அறிவித்திருந்தாலும், கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) என்பன அதற்கு வழங்கும் அக்கறையின்மை தொடர்பில் குழு வினவியது.

பாராளுமன்றத்தினால் வழங்கும் பணிப்புரைகளை செயற்படுத்தத் தவறியமை பாராளுமன்றத்தை அவமதிப்பதாகும் எனத் தெரிவித்த குழு, மனிதத் தலையீடுகளை குறைக்கவேண்டும் என்பது குழுவின் கருத்தாக இருந்தது. டிஜிட்டல் மயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்ட குழு கட்டமைப்பிலுள்ள ஒரு குழுவினர் காரணமாக அவ்வாறு டிஜிட்டல் மயமாக்குவது சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியது.

இவ்வாறு ஒரு குழுவினருக்கு இடமளிப்பதால் பாவனையாளர்கள் மீது சுமையை ஏற்படுத்துவது மட்டுமே என்றும், இந்த நிலையை சரிசெய்ய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதைவிடவும் கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழு வலியுறுத்தியது.

அத்துடன், இந்தக் குழுவில் மேலும் 5 ஆண்டறிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதற்கமைய, இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டறிக்கை, திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தின் 2022 வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் 2022 ஆம் ஆண்டறிக்கை, 2020 இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை மற்றும் இலங்கை சீனி (தனியார்) கம்பனியின் 2017 ஆம் ஆண்டறிக்கை என்பன குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்டன.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஆண்டறிக்கையை கருத்திற்கொண்ட குழு, கழிவு நீரை வினைத்திறனாகப் பயன்படுத்தும் பொறிமுறை தொடர்பில் வருகை தந்த அதிகாரிகளிடம் வினவியது. பல்வேறு அபிவிருத்தியடைந்த நாடுகள் வினைத்திறனான கழிவு முகாமைத்துவக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளதகவும் தேசத்தின் நம்மை கருதி அவ்வாறான பொறிமுறைகளை செயற்படுத்துவது தொடர்பில் கண்டறிய வேண்டும் என குழு வலியுறுத்தியது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ மதுர விதானகே மற்றும் அரசாங்க நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin