மந்தகதியில் நகரும் மலேசிய பொருளாதாரம்

மலேசிய பொருளாதாரம் கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் எதிர்பார்த்த அளவுக்கு வேகமெடுக்கவில்லை. சீனாவுக்கான ஏற்றுமதி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என மலேசிய பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பொருளாதாரம் மீட்சியடைய இன்னும் பல காலம் பிடிக்கும் என்பதையே இது சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அக்டோபர்-டிசம்பர் இடைப்பட்ட காலத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 3.4 வீதம் அதிகரித்தது என்று மலேசிய புள்ளியியல் துறை ஜனவரி 19ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை புளூம்பெர்க் ஆய்வு மதிப்பிட்ட 4.1 வீதத்தை விடவம் குறைவாகும்.

கட்டுமானத் துறையில் ஏற்பட்ட தொய்வு, உற்பத்தி துறையில் ஏற்பட்ட தேக்கம் போன்றவையே இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு முழுவதும் இரு துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி 3.8 வீதமாக இருந்தது.

ஓராண்டு முன்புடன் ஒப்பிடும்போது டிசம்பரில் வெளிநாட்டு ஏற்றுமதி 10 வீதமாக சரிந்துள்ளது.

சீனாவின் ஏற்ற இறக்கமான பொருளியல் வளர்ச்சி மலேசிய பொருளியலை வெகுவாகப் பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றனது.

Recommended For You

About the Author: admin