வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இன்று கணிசமான அளவு விலை குறைந்துள்ளது.
அந்தவகையில், இன்று பேலியகொடையில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது.
1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை கெரட் விற்பனை செய்யப்படுகின்றது.
550 ரூபாய் முதல் 600ரூபாய் வரை போஞ்சி விற்பனை செய்யப்படுகின்றது.
முட்டைக்கோஸ் 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
தக்காளி 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
கத்திரிக்காய் 550 ரூபாய் முதல் 600ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
லீக்ஸ் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மரக்கறிகளின் விலை இன்று குறைந்தமைக்கான பிரதான காரணம் வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்களிடம் இருந்து 1,000 முதல் 1,200 ரூபா வரை கொள்வனவு செய்தமையே எனவும் கூறப்படுகின்றது.
மேலும், அதிக வலை கொடுத்து வாங்கி மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோரின் கொள்வனவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நுவரெலியா பொதுச்சந்தையில் நேற்றும் இன்றும் மாற்றங்கள் எதுவும் இல்லை