இலங்கையில் 14,294 பால் பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடை திட்டமிடல் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் ஊவா மாகாணத்தில் 6,961 பண்ணைகள், வடமேல் மாகாணத்தில் 964 பண்ணைகள், கிழக்கு மாகாணத்தில் 894 பண்ணைகள், வடமத்திய மாகாணத்தில் 723 பண்ணைகள், தென் மாகாணத்தில் 665 பண்ணைகள், மத்திய மாகாணத்தில் 2,289 பண்ணைகள், சப்ரகமுவ மாகாணத்தில் 847 கால்நடைப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ் மாவட்டத்தில் 376 கால்நடை பண்ணைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 31 பண்ணைகளும் இக்காலப்பகுதியில் மூடப்பட்டுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் 17,843 கால்நடை பண்ணைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், புள்ளி விபரங்களின் படி புதிதாக 3,549 கால்நடை பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, மாடு திருட்டு, மேய்ச்சல் தரை பிரச்சினை, முறையான கண்காணிப்பின்மை, நிதி பிரச்சினை, கறவை மாடுகளை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயற்படுத்தாமை, கால்நடை அதிகாரிகள் பற்றாக்குறை, நியாயமான விலையின்மை போன்ற பல்வேறு காரணிகளினால் பெரும்பாலான பண்ணையாளர்கள் தொழிலை விட்டு விலகி செயற்படுவதாக தெரிவிக்கின்றனர்.