இலங்கைக்கு உதவுவது குறித்து சீனா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கைக்கு ஆதரவாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் என சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தன்னால் முடிந்தளவு உதவிகளை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீனா முழுமையாக ஆதரவளிக்கும்
“சரியான தீர்வுகளுக்கு இலங்கையுடன் கலந்தாலோசிப்பதில் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா ஆதரவளிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

தற்போதைய சிரமங்கள் மற்றும் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையின் பதிலளிப்புக்கு தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம்
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்குமாறு அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் வலியுறுத்தியதை அடுத்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

“சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க ஒன்று கூடுவது முக்கியம்” என்று Suzuki செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனுக்கான ஆரம்ப ஒப்பந்தத்தை எட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor